சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கண்டித்து சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆதிதிராவிடர் பெண்ணை இழிவுபடுத்திய சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சிற்றம்பல மேடையில் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும். நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 50 க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பினர்.