1108 லிங்கத்தால் மகாசிவராத்திரி பூஜை

குத்தாலம் ஓம்காளீஸ்வரர் கோவிலில் 1108 லிங்கத்தால் மகாசிவராத்திரி பூஜை நடந்தது.

Update: 2022-03-01 19:03 GMT
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஓம்காளிஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மண்ணாலான 1108 சிவலிங்கம் கொண்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஒவ்வொரு பக்தர்களுக்கும் மண்ணால் ஆன லிங்கம் வழங்கப்பட்டு வழிபாடு நடந்தது. பின்னர் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் 1000-துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மகா சிவராத்திரி வழிபாடு செய்தனர். மகாசிவராத்திரி விழாவில் ஓம்காளீஸ்வரர் கோவில் வளாகத்தில் ஒரே இடத்தில் 1,108 மண்ணாலான சிவலிங்கம் வைத்து பூஜை நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்