ஜவுளி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தலைகீழாக கவிழ்ந்தது

ஜவுளி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2022-03-01 18:29 GMT
ஜோலார்பேட்டை, மார்ச்.2-
ஜவுளி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பெங்களூருவில் இருந்து ஜவுளி பண்டல்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் சென்னையை நோக்கி கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிபட்டியை சேர்ந்த வேலுசாமி மகன் கமுதி (வயது 34) ஓட்டி வந்தார்.

அந்த லாரி திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே ஆத்தூர்குப்பம் கீழ் பனந்தோப்பு அருகில் வந்தபோது சாலையோரம் பள்ளத்தில் திடீரென இறங்கியதில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த கன்டெய்னரும் வரிந்து விழுந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
 தகவலறிந்த அந்த பகுதி பொதமக்கள் லாரி டிரைவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை அப்புறப்படுத்த நடவடிகங்கை எடுத்தனர். விபத்து குறித்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்