மயூரநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி
மயிலாடுதுறையில் மகா சிவராத்திரியையொட்டி மயூரநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மயூரநாதர் கோவிலில் 16-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. பிப்ரவரி 26-ந் தேதி தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி 4-ம் நாள் நிகழ்ச்சியான நேற்று தஞ்சை, சென்னை, சிவகாசி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த குழுவினரின் பரதநாட்டியம் மற்றும் நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட கலைஞர்களை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் கவுரவத் தலைவர் ஏ.ஆர்.சி. விஸ்வநாதன், தலைவர் பரணிதரன், செயலாளர் விஸ்வநாதன் மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை அறங்காவலர்கள், நிர்வாகக்குழுவினர் நினைவு பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டினர். நான்கு நாட்கள் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் நாட்டிய கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.