தூத்துக்குடி:தொழிலாளி திடீர் சாவு

தொழிலாளி திடீர் சாவு

Update: 2022-03-01 17:10 GMT
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள திருவழுதிநாடார் விளையைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரது மகன் மாரியப்பன் என்ற மார்க் வின்சென்ட் (வயது 56). பந்தல் போடும் தொழிலாளி. இவர் முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தில் வசித்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டில் வாயில் நுரை தள்ளியவாறு இருந்துள்ளார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி உள்ளனர். ஆம்புலன்சில் வந்தவர்கள் மாரியப்பனை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் இறந்துவிட்டதாக கூறி சென்றனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தனபால் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்