முதல் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை பள்ளிகளில் காணொலி காட்சி மூலம் பார்க்க ஏற்பாடு

முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை பள்ளிகளில் காணொலி காட்சி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Update: 2022-03-01 16:39 GMT
பொள்ளாச்சி

நான் முதல்வன் என்னும் தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான திட்ட தொடக்க விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. 

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். இதையொட்டி பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திறன் மேம்பாட்டிற்கான திட்ட தொடக்க விழாவை மாணவிகள் நேரில் பார்க்கும் வகையில் 2 அறைகளில் வசதி ஏற்படுத்தப்பட்டது. 

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சை மாணவிகள் ஆர்வமுடன் கேட்டனர். அப்போது முதல்-அமைச்சர் பேசுகையில், படிப்புடன் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்