ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை அதிகரிப்பு

ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்ந்து உள்ளது.

Update: 2022-03-01 16:29 GMT
பொள்ளாச்சி

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஏலம் நடைபெற்றது. இதற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். 

ஏலத்திற்கு பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். 98 விவசாயிகள் 651 மூட்டை கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். 

நெகமம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 வியாபாரிகள் கலந்துகொண்டு கொப்பரை தேங்காயை ஏலம் எடுத்தனர். கடந்த வாரத்தை விட வரத்து அதிகரித்தும் விலையும் அதிகரித்து காணப்பட்டது. 

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறுகையில், ஆனைமலையில் நடந்த ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட கொப்பரை தேங்காய்களை தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. 

அதன்படி 340 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.88.50 முதல் ரூ.91.50 வரையும், 311 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.72.40 முதல் ரூ.86 வரையும் ஏலம் போனது. 

கடந்த வாரத்தை விட 67 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்தது. இருப்பினும் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.1.50 விலை அதிகரித்து காணப்பட்டது என்றனர்.

மேலும் செய்திகள்