மின்சாரம் பாய்ந்து நர்சு சாவு

தாடிக்கொம்பு அருகே மின்சாரம் பாய்ந்து நர்சு பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-01 16:13 GMT
தாடிக்கொம்பு:

அரசு மருத்துவமனை நர்சு

தாடிக்கொம்பு அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், கடலூரில் 108 ஆம்புலன்சில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 31). 

இவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து பலி

இந்த நிலையில் நேற்று இவர், வீட்டில் தனது 2-வது மகன் குளிப்பதற்காக ‘வாட்டர் ஹீட்டர்’ மூலம் வெந்நீர் வைத்தார். சிறிது நேரத்தில் வாட்டர் ஹீட்டரின் மின் இணைப்பை துண்டிக்க சுவிட்ச் பாக்சை தொட்டபோது, பாண்டியம்மாள் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. 

அதில் அவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியம்மாள் உடலை கைப்பற்றினார். 

பின்னர் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்