வடமாநில வாலிபர்களை தாக்கிய 3 பேர் கைது

வடமாநில வாலிபர்களை தாக்கிய 3 பேர் கைது

Update: 2022-03-01 14:50 GMT
வடமாநில வாலிபர்களை தாக்கிய 3 பேர் கைது
சரவணம்பட்டி

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் கோபந்து மாலிக் (வயது 29), சூரியகாந்தி தாஸ் (23). இவர்கள் 2 பேரும் கோவை கோவை எஸ்.எஸ்.குளம் அருகே கோட்டைபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். சம்பவத்தன்று கோபந்து மாலிக், சூரியகாந்தி தாஸ் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர். 

அப்போது, அவர்கள் கடையில் நின்று அவர்களின் மொழியில் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். இதனைக்கண்ட அதே பகுதியை சேர்ந்த  ஆட்டோ டிரைவர்கள்  சிங்காரவேலன் (42), ஜீவா (19), லோகேஷ் (20) ஆகியோர் பெண்களை கேலி செய்வதாக நினைத்து, வடமாநில வாலிபர்களை சரமாரியாக தாக்கினர். 

இதுகுறித்து வடமாநில வாலிபர்கள் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடமாநில வாலிபர்களை தாக்கிய சிங்காரவேலன், ஜீவா, லோகேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்