காங்கேயம் அருகே உள்ள முத்தூர் பகுதியை சேர்ந்தவர் தரணீஷ் வயது 19. இவர் 16 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிைலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் இதுகுறித்து காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காங்கேயம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் தரணீஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.