சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை தாக்கி செல்போனை பறித்து கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 26). டிரைவர். இவர் நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி அருகே சாலை ஓரமாக நடத்து சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கத்தியால் தாக்கினர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சுந்தரமூர்த்தி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.