பாட்டவயல் அருகே குடியிருப்பு பகுதியில் மண் சரிவு
பாட்டவயல் அருகே குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
பந்தலூர்
பாட்டவயல் அருகே குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
சிமெண்டு சாலை
பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே கொட்டாடுகணையம்வயல் பகுதியில் ஏராளமான ஆதிவாகள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். கஇந்தபகுதி செல்லும் சாலை மண்சாலையாகவும் குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது.
இதனால் பொதுக்கள் சாலை அமைத்து தரவேண்டும் என்று சம்பந்தபட்ட துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு பலலட்ச ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் கணையம்வயல் அங்கன் வாடி முதல் பொதுமக்கள் மற்றும் ஆதிவாசிகள் குடியிருப்புவரை சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.
மண்சரிவு-தடுப்புச்சுவர் வேண்டும்
நாளடைவில் சாலை பழுதடையதொடங்கியது. இந்தநிலையில் ஏற்கனவே பெய்த மழையில் சாலையில் விரிசல் ஏற்பட்டதுடன் சாலையோரம் மண்சரிவும் ஏற்பட்டது. மேலும், குடியிருப்புகளின் பின்புறமும் மண்சரிவு ஏற்பட்டது. பலத்தமழை பெய்தால் மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சம்பந்தபட்டதுறையினர் சாலையை சீரமைத்து சாலை ஓரங்களில் தடுப்புசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.