முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது சம்பவத்தை கண்டித்து காஞ்சீபுரத்தில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அ.தி.மு.க.வினர்ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டதாக கூறி தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதையொட்டி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது, முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமாரை பழிவாங்கும் நோக்கில் ஜாமீனில் வெளிவராத வகையில் அடுத்தடுத்து வழக்குகளை போடுவதாக தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், செட்டிபுண்ணியம் குணசேகரன், கஜா என்கிற கஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்.எல்.ஏ.கனிதா சம்பத் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
காஞ்சீபுரம்
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மதனந்தபுரம், கே.பழனி, அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், மாங்காடு நகர செயலாளர் மாங்காடு எம்.பிரேம்சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.