வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் தெப்ப திருவிழா
சேரன்குளத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.;
வடுவூர்:-
மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சீனிவாச பெருமாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. வீதி உலாவை தொடர்ந்து கோவிலின் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள், தாயாருடன் எழுந்தருளி அருள்பாலித்தார். இதையடுத்து தெப்பம் குளத்தை 3 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.