இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரிக்கை
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரிக்கை
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. உடுமலை தாலுகா கண்ணமநாயக்கனூர் ஊராட்சி பாப்பம்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 35க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பத்தினர் சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டில் சிரமத்துடன் வசித்து வருகிறோம். வீட்டுமனைப்பட்டா கேட்டு ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். நத்தம் புறம்போக்கு நிலம் எங்கள் பகுதியில் இல்லை என்று தாசில்தார் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.