கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கடை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-28 22:26 GMT
புதுக்கடை:
புதுக்கடை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவி
புதுக்கடை அருகே உள்ள உதச்சிகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஹென்றி தாசன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் அகிலா (வயது21). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். 
சம்பவத்தன்று அகிலாவின் பெற்றோர் ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்றனர். அப்போது வீட்டில் அகிலா மட்டும் தனியாக இருந்தார்.
பின்னர் பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. அவர்கள் கதவை தட்டியும் உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. 
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால், சந்தேகம் அடைந்த அவர்கள் மாடிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அகிலாவின் அறையில் சென்ற போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அகிலா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இதுகுறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக புதுக்கடை இன்ஸ்பெக்டர் முகமது இட்ரியாஸ் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்