திருமங்கலம், சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 83). இவர் மனைவி, மகன் மோகன் மற்றும் பேத்திகளுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே வரும்போது கார் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் சதா சிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்