முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு
விருதுநகரில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பை மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி தொடங்கி வைத்தார்.
விருதுநகர்,
விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இந்திய மருத்துவக் குழு அறிவுறுத்தலின் பேரில் அடிப்படை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ பணியின் சிறப்பு, மனநலம், உடல்நலம் ஆகியவற்றை பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தலைமையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடங்கும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி முதலாமாண்டு மாணவர்களுக்கு மருத்துவர்கள் அணியும் வெள்ளை நிற' கோட்' அணிவித்து சிறப்பு செய்தார். மருத்துவர்களின் எளிமை, நேர்மை தூய்மைக்கு இந்த 'கோட்' ஒரு அடையாளமாக விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.