சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-02-28 20:31 GMT
வத்திராயிருப்பு,
சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். 
சுந்தரமகாலிங்கம் கோவில் 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பின்னர் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினி மூலம் கை கழுவுதல் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு பின் பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 
கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள வழுக்குப்பாறையில் தண்ணீர் வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடிய பின்னர் மலை ஏற ஆரம்பித்தனர். 
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தயிர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். 
நான்கு கால பூஜை 
நேற்று மாசி மாத பிரதோஷம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டனர். இன்று மகா சிவராத்திரி என்பதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு இரவு 8 மணி, நள்ளிரவு 12 மணி, நாளை அதிகாலை 3 மணி, 6 மணி உள்ளிட்ட நேரங்களில் நான்கு கால சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
 பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்