20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகரில் 20 டன் ரேஷன் அரிசி, 6 டன் ரேஷன் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-28 20:08 GMT
விருதுநகர், 
விருதுநகரில் 20 டன் ரேஷன் அரிசி, 6 டன் ரேஷன் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி-கோதுமை
 விருதுநகர் கருப்பசாமி நகரில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இதனை மதுரையை சேர்ந்த சசிக்குமார் என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இந்த குடோனில் இருந்து கோவைக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு லாரியில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
பறிமுதல் 
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த குேடானில் சோதனை நடத்தினர். ெமாத்தம் 20 டன் ரேஷன் அரிசி மற்றும் 6¼ டன் கோதுமை இருந்தது. அவற்றுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
 இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 25), கோவையை சேர்ந்த வேல்முருகன் (22), நாகப்பட்டினத்தை சேர்ந்த அழகிரி (25), இவர்களுக்கு ரேஷன் பொருட்களை வீடுகளில் இருந்தும், ரேஷன் கடைகளில் இருந்தும் வாங்கிக் கொடுத்த விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்த சக்தி (34) உள்பட 5 பேரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி மூடைகள் இருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இந்த அரிசி, கோதுமை மூடைகள் கோவையில் யாருக்கு கொண்டு செல்லப்பட இருந்தது? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்