போக்சோ சட்டத்தில் பெயிண்டர் கைது
நெல்லை அருகே போக்சோ சட்டத்தில் பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). பெயிண்டரான இவர், சம்பவத்தன்று 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.