அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது;
உப்பிலியபுரம், மார்ச்.1-
உப்பிலியபுரத்தை அடுத்த நெட்டவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24). இவரும், இவரது சித்திமகன்கலிங்கமுடையான்பட்டியை சேர்ந்த வசந்த் (19) என்பவரும் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றவர்களை கண்டித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில், முசிறியை அடுத்த தொப்பளாம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (24), ஜெயபால் (20), கருத்தளாம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் (23), லோகேஷ் (23) ஆகியோர் சேர்ந்து செந்தில்குமாரயைும், வசந்த்தையும் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ்ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷ், ஜெயபால், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் லோகேசை தேடி வருகின்றனர்.