கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி, மார்ச்.1-
மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மண்ணச்சநல்லூர் வடக்கு ஈச்சம்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து (வயது 46), தெற்கு ஈச்சம்பட்டியை சேர்ந்த சேக்அப்துல்லா (48) ஆகியோர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணத்தில் இருந்ததால் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். இதேபோல் உப்பிலியபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட துறையூரை சேர்ந்த மருதபாண்டியன் (28) என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். அதன்படி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.