சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் இயக்குனர் பாரதிராஜாவின் உறவினர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-02-28 19:03 GMT
விக்கிரவாண்டி

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 67). சின்னத்திரை இயக்குனர். இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் உறவினர் ஆவார். மனோஜ்குமார் தனது காரில் மனைவி செல்வி (வயது 56), உதவியாளர் ரகுபதி (49) ஆகியோருடன் நேற்று காலை தேனி நோக்கி சென்றுகொண்டிருந்தார். காரை மனோஜ்குமார் ஓட்டினார். 

கார் கவிழ்ந்தது

  இந்த நிலையில் விக்கிரவாண்டி தனியார் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மனோஜ்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 

 அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்