ராமேசுவரத்தில் இன்று தேரோட்டம்
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
ராமேசுவரம்
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
சிவராத்திரி திருவிழா
ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 8-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக மேலத்தெருவில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர் இரவு 8 மணிக்கு மண்டகப்படியில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்ற பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பாடாகி கோவிலை வந்தடைந்தனர்.
ேதரோட்டம்
விழாவின் 9-ம் நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை சுவாமி, அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8.40 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. மாசி மகாசிவராத்திரியான இன்று ராமேசுவரம் கோவிலானது பகல் மற்றும் இரவு முழுவதும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.மகா சிவராத்திரியான இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலும் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது.