தேவகோட்டை நகரசபை தலைவர் பதவிக்கான தேர்தலை பாதுகாப்புடன் நடத்த வேண்டும்-அ.தி.மு.க.வினர் மனு

4-ந்தேதி நடைபெற உள்ள தேவகோட்டை நகரசபை தலைவர் பதவிக்கான தேர்தலை பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.;

Update:2022-02-28 23:59 IST
சிவகங்கை,

4-ந்தேதி நடைபெற உள்ள தேவகோட்டை நகரசபை தலைவர் பதவிக்கான தேர்தலை பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

கோரிக்கை மனு

 தேவகோட்டைநகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நாளை(புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளனர். மேலும் இவர்களில் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த நகராட்சியில் 10 வார்டுகளில் அ.தி.மு.க.வும் 5 வார்டுகளில் அ.ம.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் சுந்தரலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அ.ம.மு.க. கவுன்சிலர்கள் 5 பேரின் ஆதரவு உள்ளதாம். 
இந்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் அ.தி.மு.க.வினர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

பாதுகாப்பாக நடத்த வேண்டும்

வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ள நகர்மன்ற தலைவர் தேர்தலில் தேவகோட்டை நகராட்சி அ.தி.மு.க.வின் சார்பில் நகரசபை தலைவர் வேட்பாளராக 1-வது வார்டில் வெற்றி பெற்ற சுந்தரலிங்கம் போட்டிருக்கிறார்.அவருக்கு மொத்தம் உள்ள 27 உறுப்பினர்களில் 15 பேருடைய ஆதரவு உள்ளது. இந்த நிலையில் 24-வது வார்டு தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் பிச்சையம்மாள் தன்னை கடத்திச் சென்றுவிட்டதாக தவறான புகார் அளித்துள்ளார். இதன் மூலம் தேர்தலை தள்ளி வைக்க முயற்சி செய்கிறார்கள். எனவே 4-ந் தேதி நடைபெற உள்ள தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலை தள்ளிவைத்து விடாமல் உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்