வீட்டின் கதவை உடைத்து ரூ.6 லட்சம் நகை கொள்ளை

திண்டிவனம் அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-02-28 18:21 GMT
பிரம்மதேசம்

திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே ஆத்தூர் கூட்டுரோட்டை சேர்ந்தவர் சுபேதா (வயது 33). இவருடைய கணவர் இறந்துவிட்டார். இந்த நிலையில் சுபேதாவின் உறவினர் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக திண்டிவனத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உதவி செய்வதற்காக கடந்த 24-ந்தேதி சுபேதா ஆஸ்பத்திரிக்கு சென்றார். 
இந்த நிலையில் நேற்று காலை சுபேதா வீட்டுக்கு திரும்பி சென்றார். 
அப்போது அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
  இதையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 17 பவுன் நகை மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. 

வலைவீச்சு

அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் சுபேதா திண்டிவனத்திற்கு சென்றதை நோட்டமிட்ட, அவர்கள், வீட்டுக்குள் புகுந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. 

  இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்