சிவன் கோவில்களில் மாசி பிரதோஷ விழா

வெள்ளகோவில், முத்தூர் பகுதி சிவன் கோவில்களில் மாசிபிரதோஷ விழாவையொட்டி நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-02-28 18:06 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவில், முத்தூர் பகுதி சிவன் கோவில்களில் மாசிபிரதோஷ விழாவையொட்டி நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளகோவில்
மாசி  பிரதோஷ விழாவையொட்டி நேற்று வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர்கோவில், மயில்ரங்கம் வைத்தியநாதசாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர்கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் உள்ள சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
 நேற்றுமாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
முத்தூர்
முத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியநாச்சியம்மன் உடனமர் சோழீஸ்வரர் கோவில், செங்கோடம்பாளையம்-சோமயநல்லூர் கருணாம்பிகா உடனமர் கைலாயநாதர் கோவில், வள்ளியரச்சல் மாந்தீஸ்வரர் கோவில் மற்றும் நத்தக்காடையூர் பாலசவுந்திரவள்ளி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில், மருதுறை பச்சை மரகதவள்ளி உடனமர் பட்டீஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் மாசி மாத பிரதோஷ பூஜை நேற்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு இக்கோவில்களில் உள்ள நந்தி எம்பெருமான் மற்றும் சிவன்-பார்வதிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்கார மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. 
அன்னதானம்
முடிவில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு சமூக இடைவெளியுடன் பிரசாதங்கள், சர்க்கரை பொங்கல், அன்னதானம் வழங்கப்பட்டது. 
விழாவில் திரளான பக்தர்கள், சுற்றுவட்டார நகர, கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்