மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை

மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.;

Update: 2022-02-28 18:00 GMT
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம், தென்கரைக்கோட்டை நஞ்சுண்டேஸ்சுவரர் கோவிலில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி சாமி மற்றும் நந்திக்கு பால், பன்னீர், இளநீர், தேன், மஞ்சள், சந்தனம், வில்வம், திருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடை பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோன்று கம்பைநல்லூர் அருகே உள்ள சிந்தாமணி ஈஸ்வரர் கோவில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்