திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற தபால் அதிகாரி பலி

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற தபால் அதிகாரி பலி;

Update: 2022-02-28 17:59 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் சந்தப்பேட்டை சுப்பிரமணியன் நகரைச் சேர்ந்தவர் பழனிமுத்து (வயது 62). ஓய்வு பெற்ற தபால் அதிகாரியான இவர் நேற்று முன்தினம் இரவு திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி சாலையில் சந்தப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பழனிமுத்து மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பழனிமுத்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்