மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-28 17:21 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி மூர்த்தியூர் கரியன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 40). மணல் கடத்தல் வழக்கில் இவரை கடந்த ஜனவரி மாதம் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜயன் மீது ஏற்கனவே ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் 2 மணல் திருட்டு வழக்கு உள்ளது. இதனால் அவரை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலெக்டருக்கு பரிந்துரைசெய்தார். 
அதன் பேரில் விஜயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய  கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்