கலவையில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி
கலவையில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. போட்டியை கலவை கிங்ஸ் வாலிபால் குழுவினர் நடத்திய இந்த போட்டியை கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், ஆற்காடு தொழிலதிபர் ஏ.வி.சாரதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 68 அணிகள் கலந்து கொண்டன. இதில் சென்னை சூர்யா பிரண்ட்ஸ் அணி வெற்றிபெற்று முதலிடம் பிடித்தது. கலவை அரவிந்த் பிரண்ட்ஸ் அணி இரண்டாவது இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக் பரிசுகள் வழங்கி பாராட்டினார். கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, வழக்கறிஞர் செல்லபாண்டியன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் சனாவுல்லா, பரஞ்சோதி, சித்திக் பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.