ராமநாதபுரம்
பரமக்குடி தாலுகா மருந்தூர் கணக்கனேந்தல் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சுமார் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட எங்கள் கிராமத்தில் தினமும் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அரசு பஸ்சில் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இதுதவிர பொதுமக்கள் அனைவரும் இந்த பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்சை தான் நம்பி உள்ளனர். இந்நிலையில் பரமக்குடியில் இருந்து முத்துச்செல்லாபுரம், எஸ்.காவனூர், மருந்தூர் கணக்கனேந்தல், வெங்கிட்டங்குறிச்சி வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக நடந்து செல்லக்கூட முடியாத வகையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி நாங்கள் அனைவரும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றோம். எனவே சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.