பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது
பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் சின்னாண்டாங்கோவில் பசுபதி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் பரணிகுமார் (வயது21). சரக்கு வாகன டிரைவர். இவர் 17 வயதுடைய பிளஸ்-2 படிக்கும் மாணவியை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து உறவு வைத்து கொண்டதாக, மாணவியின் தாயார் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பரணிகுமாரை கைது செய்து காவலில் அடைத்தார்.