விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

வேதாரண்யம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-28 16:57 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் பொன்னன்காடு பகுதியைச் சேர்ந்தவர் உதயராசன் (வயது32). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயராசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உதயராசன் பணம் திருடியதாக ஒருவர் போலீசில் புகார் கொடுத்ததால் மனவேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்