செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

பயிர் காப்பீடு தொகை கிடைக்காததால் மன உளைச்சலில் செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

Update: 2022-02-28 16:51 GMT
முத்துப்பேட்டை:
பயிர் காப்பீடு தொகை கிடைக்காததால் மன உளைச்சலில் செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தார். 
காப்பீடு தொகை கிடைக்கவில்லை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த எடையூர்- சங்கேந்தி பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது46). விவசாயி. இவர் தான் சாகுபடி செய்த பயிருக்கு 2021-2022-ம் ஆண்டுக்கான காப்பீட்டு தொகை செலுத்தியிருந்தார். ஆனால் இவருக்கு வரவேண்டிய காப்பீடு தொகை கிடைக்கவில்லை. மேலும் அந்த பகுதியை சேர்ந்த 56 பேருக்கு தொகை வழங்காமல் விடுபட்டுள்ளது. 
இதையடுத்து விடுபட்டவர்களுக்கு தொகையை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. விவசாய செலவிற்காக வாங்கிய கடனை திருப்பிச்செலுத்த வழியின்றி தவித்த கலைச்செல்வன் அதிகாரிகளிடம் பலமுறை போராடியும் காப்பீடு தொகை கிடைக்கவில்லை. 
செல்போன் கோபுரத்தில் ஏறி கொலைமிரட்டல் 
இதனால் மன உளைச்சலில் இருந்த கலைச்செல்வன் நேற்று மதியம் 1.30 மணி அளவில் அதே பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன், கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன், ஊராட்சி மன்றத்தலைவர் ராஜா மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ்கலைச்செல்வனிடம் விரைவில் பயிர் காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். பின்னர் போலீசார் அவரை எடையூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
---

மேலும் செய்திகள்