சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-02-28 16:47 GMT
கூத்தாநல்லூர்:
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
ருத்ர கோடீஸ்வரர் கோவில்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பழமை வாய்ந்த ருத்ர கோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில் ருத்ர கோடீஸ்வரராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான  பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி காசிவிசுவநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்  கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி 
ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் பிரகார உலா நடந்தது. நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
வலங்கைமான்
வலங்கைமான் அருணாச்சலேஸ்வரர், கைலாசநாதர், வைத்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், ஆவூர் பசுபதீஸ்வரர்,  அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர், நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர், சந்திரசேகரபுரம் சந்திரமவுலீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
திருமக்கோட்டை
திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிவனுக்கும்,  நந்திகேஸ்வரருக்கும் பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
---

மேலும் செய்திகள்