முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்
இளையான்குடியில் முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம் நடந்தது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள பகைவரை வென்றான் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. இரவு முழுவதும் பெண்கள் கும்மி கொட்டி குலவையிட்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கூத்தப்பெருமாள் கோவிலில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியுடன் பெண்கள் ஊர்வலமாக ஊரை சுற்றி வந்தனர். அதன்பின்னர் கூத்தப்பெருமாள் கோவில் குளத்தில் முளைப்பாரி கரைக்கப்பட்டது.