விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி நாகையில், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-28 16:31 GMT
நாகப்பட்டினம்:

நாகை அவுரி திடலில் சி.ஐ.டி.யூ. விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் பேசினார்.
உர மானியம், பயிர் காப்பீடு, பெட்ரோல், கியாஸ் மானியம் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். 40 கோடி முறைசாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாத்திட வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் நெல், கோதுமை கொள்முதல் நிதி குறைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ.25 ஆயிரம் கோடி குறைத்ததை கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்