மோகனூர் அருகே விஷம் தின்று பெண் தற்கொலை

மோகனூர் அருகே விஷம் தின்று பெண் தற்கொலை

Update: 2022-02-28 16:20 GMT
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மனைவி பாப்பாயி (வயது 55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி மருமகன் இறந்து விட்ட நிலையில் மகள் மற்றும் மகனுடன் ஒன்றாக வசித்து வந்தனர். 
இந்த நிலையில் மகளின் வாழ்க்கையை எண்ணி பாப்பாயி மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 22-ந் தேதி விஷத்தை தின்று உயிருக்கு போராடினார். அவரை குடும்பத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பாப்பாயி இறந்தார். இதுகுறித்து அவருடைய மகன் ராஜசேகரன் (21) மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்