கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

வேதாரண்யம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2022-02-28 16:04 GMT
வேதாரண்யம்:
 வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு ஆதிபராசக்தி கோவில் கிழக்கு பகுதியில் தென்புறமாக கள்ளிமோட்டான்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக தேத்தாகுடி தெற்கு கிராம நிர்வாக அலுவலர் உலகேஸ்வரன், வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இருந்து உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர்களை வரவழைத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்