திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் மணலில் சிவலிங்கம் உருவாக்கி வழிபாடு

சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் மணலில் சிவலிங்கம் உருவாக்கி கேரள பக்தர்கள் வழிபாடு நடத்தினர்

Update: 2022-02-28 14:52 GMT
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு ஊர்களுக்கு சென்று விட்டு திருச்செந்தூர் வந்தனர். இங்கு நேற்று முன்தினம் மாலையில் கோவில் கடற்கரை மணலில் சிவலிங்கத்தை உருவாக்கி, யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அப்போது கடற்கரைக்கு வந்த பக்தர்கள் மணலில் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர். அந்த மணல் சிவலிங்கம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் செய்திகள்