போலியோ சொட்டு மருந்து முகாம்
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் ஊராட்சியில் நேற்று 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சிற்றம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீனிவாசன், அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த முகாமில் சிற்றம்பாக்கம், தென்காரணி போன்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் லட்சுமி, ஊராட்சி செயலாளர் சுகுமார், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நேற்று பொது சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருவள்ளூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வீணா, சுகாதார ஆய்வாளர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்கினார்கள்.