தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது

முறப்பநாடு அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-02-28 13:25 GMT
ஸ்ரீவைகுண்டம்:
முறப்பநாடு அருகே உள்ள சென்னல்பட்டிகிழக்கு தெருவை சேர்ந்தவர் சேதுபாண்டி. இவரது மகன் இசக்கிபாண்டி (வயது 23). இவருக்கும்,  பக்கத்து வீட்டுக்காரரான சப்பாணி மகன் தொழிலாளியான செல்வம் (55), அவரது மனைவி மாரியம்மாள் (47) ஆகியோருக்கு இடையே வீட்டுக் கழிவு நீர் செல்வது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது இசக்கிபாண்டி மாரியம்மாளை கம்பால் தாக்கிவிட்டு சென்னல்பட்டி பஸ் நிறுதத்திற்கு சென்றுவிட்டார்.  இதனை அறிந்த மாரியம்மாள் கணவரான செல்வம் சென்னல்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த இசக்கிபாண்டியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கிபாண்டி, செல்வத்தை தாக்கியதுடன் அரிவாளால் வெட்டியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிய செல்வம் அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து இசக்கிபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்