செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் விளையாட்டு விழா

செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 14-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

Update: 2022-02-28 12:51 GMT
இதில் வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை தாங்கினார். சுரேஷ் கன்காரியா முன்னிலை வகித்தார். முதல்வர் வி.சி.கோவிந்தராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், வங்கி மேலாளர் ஷான் ஆதம் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முடிவில் மாணவி நித்திகா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்