செங்கல்பட்டு அருகே கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்திக்கொலை

செங்கல்பட்டு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட மேஸ்திரியை கத்தியால் குத்திக்கொன்ற உறவினர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-28 12:12 GMT
மதுபோதையில் மோதல்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டகொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 63). இவர் தனது மனைவி அமுதா மற்றும் உறவினர்களான ராமதாஸ், வெங்கடேசன் ஆகியோருடன் செங்கல்பட்டு அருகேயுள்ள நெம்மேலி பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு குமார், ராமதாஸ், வெங்கடேசன் ஆகிய 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மேஸ்திரி குமாருக்கும், ராமதாஸ் என்பவருக்கும் இடையே மதுபோதையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

கொலையாளி கைது

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் அருகே இருந்த கத்தியை எடுத்த மேஸ்திரி குமாரை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். இதனை கண்ட குமாரின் மனைவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் அங்கிருந்து கொலை குற்றவாளி ராமதாஸ் தப்பி ஓட முயன்றபோது மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதனையடுத்து குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து ராமதாசிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்