மாநில அளவிலான சிலம்ப போட்டி மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்பு

ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் மாநில அளவிலான சிலம்ப போட்டி மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்பு.

Update: 2022-02-28 00:03 GMT
சென்னை,

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு ஏற்பாடு செய்யப்படடு இருந்தது. நேற்று நடைபெற்ற இந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டித் தொடரில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரர்களை பாராட்டினார்.

இந்தப் போட்டித் தொடரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். போட்டியில் கலந்து கொண்ட சிலம்பாட்ட வீரர்கள் மத்திய மந்திரி எல்.முருகனுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஏற்பாடு செய்திருந்த பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்று வானொலி மூலம் உரையாற்றிய பிரதமரின் உரையை கேட்டார்.

மேலும் செய்திகள்