ஈரோட்டில் மாநில அளவிலான நீச்சல் போட்டி; 300 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 300 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2022-02-27 21:17 GMT
ஈரோடு
ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 300 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
மாநில நீச்சல் போட்டி
ஈரோடு மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டி ஈரோடு அருகே மேட்டுக்கடை குபேரலட்சுமி விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று நடந்தது. இதன் தொடக்க விழாவுக்கு சங்க தலைவர் சஞ்சீவ் குமார் அகர்வால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குமார், விளையாட்டு அரங்க தலைவர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க பொதுச்செயலாளர் டி.சந்திரசேகரன் கலந்துகொண்டு நீச்சல் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 6 பிரிவுகளில் மொத்தம் 110 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 300 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
பதக்கம்
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்கள். இதில் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் பிரியா சசிமோகன், அக்னி ஸ்டீல் நிர்வாக இயக்குனர் எம்.சின்னசாமி, சூர்யா என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் கே.கலைசெல்வன், வேளாளர் கல்லூரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், தலைமை பயிற்சியாளர் விஜீஸ், விளையாட்டு அரங்க பொருளாளர் நந்தகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போட்டிகளை ஈரோடு மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் எஸ்.ரமேஷ் தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்