நெல்லை:
சட்ட விரோத மது விற்பனையை தடை செய்யும் வகையில், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 162 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக முக்கூடலை சேர்ந்த பிச்சுமணி (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் டவுன் ஆர்ச் பகுதியில் மது விற்றதாக நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த தங்கராஜ் (55) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.