நெல்லை:காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 55). இவர் ஒரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சங்கரலிங்கம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடைய மனைவி கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட சங்கரலிங்கம் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சங்கரலிங்கத்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.